47 மாடி கட்டடத்தில் வெறும் கைகளை கொண்டு ஏறி சாகசம் : பிரான்ஸ் "ஸ்பைடர்மேன்" கைது

பிரான்சை சேர்ந்த, 'அலைன் ராபர்ட்' என்பவர், பிலிப்பைன்ஸில் உள்ள, 47 மாடி கட்டடத்தில், வெறும் கைகளால் ஏறி சாகசம் புரிந்தார்.
47 மாடி கட்டடத்தில் வெறும் கைகளை கொண்டு ஏறி சாகசம் : பிரான்ஸ் ஸ்பைடர்மேன் கைது
x
பிரான்சை சேர்ந்த, 'அலைன் ராபர்ட்' என்பவர், பிலிப்பைன்ஸில் உள்ள, 47 மாடி கட்டடத்தில், வெறும் கைகளால் ஏறி சாகசம் புரிந்தார். மணிலாவில் உள்ள ஒரு கட்டடத்தில், எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடும் இல்லாமல், விறுவிறுவென அவர் ஏறி, இறங்கியதைப் பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், அங்கு வந்த போலீசார், அனுமதி இன்றி கட்டடத்தில் ஏறியதற்காக அவரை கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டின் 'ஸ்பைடர் மேன்' என அழைக்கப்படும் அலைன் ராபர்ட், ஏற்கனவே, துபாயில் உள்ள உலகின் உயரமான புர்ஜ் கட்டடம் உள்பட 150க்கும் மேற்பட்ட உயரமான கட்டடங்களில் கைகளால் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்