ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் - உலகளவில் வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டுப்பாடு

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் -  உலகளவில் வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டுப்பாடு
x
ஒரு செய்தியை, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய முடிகின்ற வகையில், வாட்ஸ் அப் நிறுவனம், மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு மூலம், வதந்திகள் ஓரளவு குறைந்தது. வாட்ஸ் அப் வதந்திகளை நம்பி, பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் இதைத் தடுக்கும் வகையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்யும், கட்டுப்பாடு விதித்தது. தற்போது, இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும், அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்-அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்