பறக்கும் கார்கள் தயாரிக்க ஜப்பான் தீவிரம்: ரூ. 286 கோடி நிதி ஒதுக்க முடிவு

பறக்கும் கார்கள் தயாரிப்பது தொடர்பாக 2019ஆம் ஆண்டில் ரூ. 286 கோடி நிதி ஒதுக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
பறக்கும் கார்கள் தயாரிக்க ஜப்பான் தீவிரம்: ரூ. 286 கோடி நிதி ஒதுக்க முடிவு
x
பறக்கும் கார்கள் தயாரிப்பது தொடர்பாக 2019ஆம் ஆண்டில் ரூ. 286 கோடி நிதி ஒதுக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகள் பறக்கும் கார் தயாரிக்கும் முயற்சியில் ஏற்கனவே ஆர்வம் காட்டி வரும் வேளையில், எல்லாவற்றிற்கும் முன்னதாக பறக்கும் கார்களை வெற்றிகரமாக தயாரிக்க ஜப்பான் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.  இதற்காக உதவிட வாகன உற்பத்தி, விமான தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களை அரசு அணுகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில், வாகன போக்குவரத்தில் பெரும் புரட்சியே ஏற்படும் என்று கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்