தகவலை பாதுகாக்கத் தவறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் : பேஸ்புக் முதலிடம்

தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில், மக்களிடம் நம்பகத்தன்மை குறைந்த நிறுவனமாக பேஸ்புக் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தகவலை பாதுகாக்கத் தவறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் : பேஸ்புக் முதலிடம்
x
தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும்  நிறுவனங்களில், மக்களிடம் நம்பகத்தன்மை குறைந்த நிறுவனமாக பேஸ்புக்  இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட  கருத்து கணிப்பில் , தங்களின் தகவல்களை பாதுகாப்பதில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லை என 40 சதவீதம் பேர்   தெரிவித்துள்ளனர். டிவிட்டர், அமேசான் நிறுவனங்கள் மீது தலா 8 சதவீதம் பேர் நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டுள்னர். உபெர் நிறுவனத்தின் மீது 7 சதவீதம் பேரும்,  கூகுள் மீது 6 சதவீத நபர்களும், ஆப்பிள், ஸ்நாப்சாட் நிறுவனங்கள் மீது தலா 4 சதவீதம் பேரும் நம்பிக்கை இல்லை என கூறியுள்ளனர். மிகக் குறைந்த அளவாக நெட்பிளிக்ஸ், டெஸ்லா நிறுவனங்கள் மீது 1 சதவீதம் பேர் நம்பிக்கையில்லை என்கிற கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்