பிரான்ஸில் தொடர்ந்து 4 வது வாரமாக வெடித்து வரும் கலவரம்...

பிரான்ஸில் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில், கலவரம் வெடித்து வருகிறது.
பிரான்ஸில் தொடர்ந்து 4 வது வாரமாக வெடித்து வரும் கலவரம்...
x
பிரான்ஸில் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில், கலவரம் வெடித்து வருகிறது. அதிபர் இமானுவேல் மேக்ரோனின் பதினெட்டு மாத  ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறி, கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில்,  பல்வேறு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்து,  போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் வீசியதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதுவரை 1000 க்கும் மேற்பட்ட போராட்டக்கார்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கு இடையே திருடர்கள் ஊடுருவியுள்ளதால் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்