சுறாக்கள் மனிதர்களை வேட்டையாடுகிறதா..?

அரிய வகை சுறாக்கள், 'ரே' (RAY) வகை சுறா மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், அதிகரித்து வரும் மீன் பிடி வர்த்தகத்தால், அழிவின் விளிம்பில் உள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சுறாக்கள் மனிதர்களை வேட்டையாடுகிறதா..?
x
* அரிய வகை சுறாக்கள், 'ரே' (RAY) வகை சுறா மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், அதிகரித்து வரும் மீன் பிடி வர்த்தகத்தால், அழிவின் விளிம்பில் உள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

* அழியும் நிலையிலுள்ள, சுமார் 50 அரிய உயிரினங்களைக் கொண்ட இந்த பட்டியலில், வாலின் மூலம் இரையை பிடிக்கும் சுறாக்கள், ஒரு பேருந்தின் பாதியளவு நீளமுள்ள 'ரே'க்கள் இடம் பெற்றுள்ளன.

* கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில், முதன்மையான இடத்தில் இருப்பது சுறாக்கள். இந்த சுறாக்களின் வாழ்விற்கு பாதிப்பு ஏற்பட்டால், அது ஒட்டு மொத்த மீன் இனங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மனிதர்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்று, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

* கடற்கரையோர ஆக்கிரமிப்புகள், மாங்குரோவ் காடுகள் அழிப்பு, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியன, கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

* பலருக்கும், சுறாக்கள் குறித்து தவறான எண்ணம் உள்ளதாகவும், அவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை, எப்படிப்பட்ட அச்சுறுத்தலின் கீழ் உள்ளன என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றும் விஞ்ஞானிகள் வேதனைப் படுகின்றனர். 

* சுறாக்களைப் பற்றிய மிகப் பெரிய கட்டுக்கதைகளில் ஒன்று, 'அது ஆபத்தானது'  என்று சொல்லப்படுவது.

அது, மனிதர்களை கொல்லக்கூடியது என்பது, முற்றிலும் தவறான ஒன்று என, கடல் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மனிதர்களின் இறப்பிற்கு, சுறாக்கள் காரணமாக உள்ளதாக, சில பதிவுகள் இருந்தாலும் அவை அடிக்கடி நிகழ்வதில்லை, வேண்டுமென்றும் செய்யப்படுவதில்லை...

சுறா என்றழைக்கப்படும் சுறா மீன், வேகமாக நீந்தக்கூடிய பெரிய மீன் வகைகளில் ஒன்று... அவ்வளவு தான்... 

Next Story

மேலும் செய்திகள்