புஷ்-ன் மரணத்தால் கலங்கித் தவிக்கும் அவரது செல்லப் பிராணி...
பதிவு : டிசம்பர் 07, 2018, 12:58 PM
சீனியர் புஷ்-ன் மரணத்தால் கலங்கித் தவிக்கும், அவரது செல்லப் பிராணி குறித்துப் பதிவு செய்கிறது
* அமெரிக்காவின் 41வது அதிபராக, 1989ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பணியாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், தமது 94வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் தவிக்கும் அவரது செல்லப்பிராணி சுல்லி, (Sully) இறுதி அஞ்சலி செலுத்தியது.

* ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ.புஷ் உடன் இருந்து, அவருக்கு தேவையான உதவிகளை, 'சுல்லி' செய்து வந்தது. இந்த மரணத்தை தாங்க முடியாமல் சோகத்தில் படுத்திருக்கும், நெகிழ்ச்சியான புகைப்படத்தை, 'பணி முடிந்தது'என்ற பதிவுடன் புஷ்-ன் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தமது சமூக வலை தள பக்கத்தில், வெளியிட்டுள்ளார். 

* கடந்த 2009ஆம் ஆண்டு பயணிகள் விமானம் ஒன்றை ஹுண்ட்சன் ஆற்றில் இறக்கி, விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்களை காப்பாற்றிய விமானி செல்ஸி சுல்லி சுலென்பெர்கர் நினைவாக, சீனியர் புஷ்-ன் லாப்ரெடர் நாய்க்கு, "சுல்லி" என்று பெயரிடப்பட்டது.

* அப்போது, இரண்டு வயதாக இருந்த "சுல்லி", உடல் நலக் குறைவால், தமது வாழ்வின் இறுதி நாட்களில் சக்கர நாற்காலியில் புஷ் இருக்க நேரிட்டபோது, அவருக்கு உதவி செய்வதற்காக பணியமர்த்தப்பட்டது.

* உயர் தரமான பயிற்சி அளிக்கப்பட்ட "சுல்லி", பல்வேறு கட்டளைகளை புரிந்து கொண்டு செயல்படக்கூடியது. சீனியர் புஷ்-க்கு தேவையான பொருட்களை கொண்டு வந்து கொடுப்பது, கதவை திறந்து விடுவது, போன் அடித்தால் எடுத்துக் கொடுப்பது என பல்வேறு உதவிகளை செய்துவந்தது.

* தனக்கென பிரத்யேக சமூக வலை தள கணக்கை வைத்துள்ள "சுல்லி", சீனியர் புஷ் கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் வாக்களிப்பதற்கு உதவி செய்தது. தற்போது, ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் காலமாகிவிட்ட நிலையில், காயமடைந்த சிப்பாய்களுக்கு சிகிச்சையளிக்கும்போது உதவி செய்யும் பணியில் "சுல்லி" ஈடுபடுத்தப்பட உள்ளது. 

* பொதுவாக, அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களுக்கு, நாய்கள் பிடித்தமானதாக இருந்ததில்லை. ஜான் எஃப்.கென்னடிக்கு நாய்கள் என்றாலே பிடிக்காது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஒரு நாய் கூட இல்லை.

* பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சீனியர் புஷ், ரத்தத்தில் தொற்று ஏற்பட்டதால் ஏப்ரம் மாதம் முதல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

* அவரது செய்தித் தொடர்பாளரான ஜிம் மெக் க்ராத் கூறுகையில், தமது இறுதிச்சடங்கிற்கு யாரேனும் வருவார்களா என  ஒருமுறை வியந்து கேட்டதாக கூறியுள்ளார்.  மனிதர்கள் வந்தார்களோ இல்லையோ... இந்த செல்லப்பிராணி உயிர் இருக்கும் வரை நினைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவை உலுக்கும் பாலியல் புகார்...

நீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.

947 views

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

238 views

வர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.

620 views

நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி

தைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.

212 views

அமெரிக்காவில் விஜயகாந்த்-புகைப்படங்கள் வெளியீடு

தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

635 views

பிற செய்திகள்

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.

113 views

"இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள்" - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

485 views

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவு

இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

176 views

இலங்கை தமிழ் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் வேண்டும் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று,அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.

57 views

ஜம்மு - பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் - பாகிஸ்தான் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

590 views

ஜூடோ வீரராக களமிறங்கிய புதின் - 66 வயதில் அசத்தும் ரஷ்ய அதிபர்

தேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.