புதிய தொழில்நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது 'முத்து'
பதிவு : நவம்பர் 20, 2018, 05:40 PM
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில், மீண்டும் திரையிடப்பட உள்ளதன் பின்னணியை விவரிக்கிறது.
* நடிகர் ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் வெளியான வெற்றிப் படமான 'முத்து' திரைப்படத்தின் ஜப்பானிய பதிப்பான 'முத்து டான்சிங் மஹாராஜா (Muthu Dancing Maharaja) நவம்பர் 23-ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. இதற்காக, தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரைலர், ஜப்பானில் வரவேற்பை பெற்றுள்ளது. 

* கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், 'தேமாவின் கொம்பத்து' என்கிற மலையாளப் படத்தின் தழுவலே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முத்து'. 1995-ம் ஆண்டில், தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான இந்தப் படம், 1998-ல் ஜப்பானில் வெளியாகி, யாரும் எதிர்பாராத நிலையில், அங்கும் சூப்பர் ஹிட்டானது

* 'கலாச்சார அளவில் பெரும் புரட்சி' என்று ஜப்பானிய ஊடகங்கள் இந்த வெற்றியை கொண்டாடின. 23 வாரங்கள் ஒரே அரங்கில் ஓடி, கணிசமாக வசூல் கிடைத்தது... பின்னர், மேலும் 100 திரையரங்குகளுக்கு விரிவாக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக வசூலை அள்ளியது. 

* திரைகளில் மட்டுமின்றி, வீடியோ கேஸட், சிடி, டிவிடி, தொலைக்காட்சி ப்ரீமியர் என, ஒவ்வொரு தளத்திலும் முத்து பெரும் வரவேற்பைப் பெற்றது. முத்து வெளியான பிறகு ஜப்பானிலிருந்து, இந்தியா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. பல தென்னக உணவகங்கள் ஜப்பானில் திறக்கப்பட்டன.

* ரஜினிக்கென ஜப்பானில் ரசிகர்கள் உருவாகி, அங்கிருந்து பலர் வந்து அவரைப் பார்த்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. டோக்கியோவில் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றமும் உள்ளது. 2006-ஆம் ஆண்டு ஜப்பான் சென்ற அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கு தமது உரையில் முத்து படத்தையும் குறிப்பிட்டு அதற்கு பெரும் கைத்தட்டல்களையும் பெற்றார். அந்த அளவுக்கு முத்து படம் ஜப்பானிய மக்களிடையே பிரபலமாகியிருந்தது.
ஆனால், முத்து அளவிற்கு வேறெந்த இந்திய படங்களும் வெற்றிவில்லை. தொடர்ந்து எஜமான், பாட்ஷா, எந்திரன், அருணாச்சலம் போன்ற ரஜினி படங்களின் ஜப்பானிய பதிப்புக்கு கூட, வரவேற்பு கிடைக்கவில்லை. 

* இந்நிலையில்,  தற்போது, 'முத்து' படத்தின் புகழை மேலும், விரிவாக்க, நவம்பர் 23ஆம் தேதி மறு-வெளியீடு செய்யப்படுகிறது. 1995-ஆம் வெளியான படத்தின் அசல் நெகட்டிவ்களை டிஜிட்டலாக 4-கே தரத்தில் ஸ்கான் செய்யப்பட்டு, மேம்பட்ட தரத்தில், படம் வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1293 views

10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2658 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

471 views

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

38142 views

பிற செய்திகள்

காற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

597 views

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார்.

87 views

ரஷ்யா : சிறிய ரக விமான பயணம் தொடங்கிய நாள்

ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் இடையே சிறிய ரக விமான பயணம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.

20 views

ஜம்மு- காஷ்மீர் மாநில விவகாரம் : இந்தியா- பாக். பிரதமர்களுடன் டிரம்ப் பேச்சு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

166 views

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.

35 views

அமெரிக்கா: உருகி உடைந்த பனி பாறைகள் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாகச வீரர்கள்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், பனிக்கட்டிகள் நிறைந்த பகுதியில், சாசக வீரர்கள் இருவர் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.