"பொருளாதார உதவிகளுக்கு ஆதார் உறுதுணையாக உள்ளது" - சிங்கப்பூர் ஃபின் டெக் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இந்திய மக்கள் அனைவருக்கும், அரசின் பொருளாதார உதவிகள் சென்று சேர்வதற்கு ஆதார் உறுதுணையாக உள்ளதாக, சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பொருளாதார உதவிகளுக்கு ஆதார் உறுதுணையாக உள்ளது - சிங்கப்பூர் ஃபின் டெக் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
x
* இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெறும்  கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிடோரையும் சந்தித்து பேச இருக்கிறார்.

* முதல் நிகழ்ச்சியாக ஃபின்டெக் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் ரூபே, பீம் உள்ளிட்ட செயலிகள் மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், ஆதார் மூலம் நூறு கோடிக்கும் அதிகமானோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பொருளாதார உதவிகள் சென்று சேர்வதில் சிக்கல் இல்லை என்றும் தெரிவித்தார். ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி தான் அதன் சக்தியை பிரதிபலிப்பதாக தெரிவித்த மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய உலக நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்