நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் - சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவு : நவம்பர் 13, 2018, 11:51 PM
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஸ்ரீ சேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அடுத்தடுத்த திருப்பங்களும், உச்சகட்ட குழப்பமும் நீடித்து வரும் இலங்கையில்,நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் உள்பட மொத்தம் 15 தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

2 - வது நாளாக நீடித்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில், நாடாளுமன்றம் கலைப்புக்கு நீதிபதி, இடைக்கால தடை விதித்தார்.   

வருகிற டிசம்பர் 7 ம் தேதி வரை, இடைக்கால தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் , ஜனவரி 5 ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நாளை, புதன்கிழமை  காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை : "நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி" - ரணில்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததற்கு ரணில் விக்ரமசிங்க வரவேற்பு தெரிவித்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உச்சநீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து வரும் 19 ந்தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ராஜபக்சே அணியினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை அதிபர் சிறிசேனவை சந்தித்த சம்பந்தன்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

52 views

"இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு" - அதிபர் சிறிசேனா கூறியதாக சபாநாயகர் தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிபர் சிறிசேனா கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

13 views

"என் மீது தவறு இருந்தால் மக்கள் தீர்மானிப்பார்கள்" - ராஜபக்சே, முன்னாள் பிரதமர்

இலங்கையில் அறிவித்தபடி தேர்தல் நடக்கும் என்றும், தவறு இருந்தால் மக்கள் எங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

216 views

பிற செய்திகள்

அனைத்து நிலப்பரப்பிலும் இயங்கும் ''வீல் சேர்''

அனைத்து நிலப்பரப்பிலும் இயங்கும் ''வீல் சேர்''

8 views

இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...

இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

81 views

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர் பெற்றுள்ளார்.

30 views

இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

இமெயில் மூலம் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் நேற்று, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள முக்கிய நகரங்களில் பதட்டம் நிலவியது.

24 views

யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பியானோ இசை

யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தாய்லாந்தில் பியோனோ இசைக்கப்படுகிறது.

25 views

ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் திருமணம்

கென்யாவின் கஜியோடா மாகானத்தில் இளைஞர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

558 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.