"இலங்கையில் ஜனநாயகப் படுகொலை" - அன்புமணி ராமதாஸ்

இலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஜனநாயகப் படுகொலை - அன்புமணி ராமதாஸ்
x
இலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அந்நாட்டின் உள் விவகாரம் என்றாலும், அதில்  இந்தியாவின் பாதுகாப்பும், ஈழத்தமிழர் நலன்களும் அடங்கியிருப்பதால், இந்த விவகாரத்தில் சம்பந்தமில்லை எனக் கூறி, இந்திய அரசு கடந்து செல்ல முடியாது என்று சுட்டிக் காட்டியுள்ளார். இந்த விஷயத்தில், இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல்,  உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக, அன்புமணி தெரிவித்துள்ளார். 

 "தமிழர்களின் முதுகில் மீண்டும் குத்திவிட்டார், சிறிசேனா" - வைகோ



இலங்கையில், ராஜபக்சேவிற்கு, முழு அதிகாரத்தையும் வழங்குவதற்காக அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றி விட்டதாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர்களுக்கு  நீதி கிடைக்காது என்றும், ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்டமாக,  தமிழர்களின் பண்பாட்டுத் தனித்தன்மையை அழிக்க, கலாச்சாரப் படுகொலை நடைபெறும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

"தமிழர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்" - தினகரன்



* இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமென்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து, அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுவதாக கூறியுள்ளார். ராஜபக்சேவை பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு நாடாளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

* இந்திய அரசு, இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து, தமிழர்களின் உயிர், உடைமை, நலனுக்கு தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஐ.நா.மன்றம் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறார் - வேல்முருகன் 



இலங்கையில் நடந்திருப்பது, மாபெரும் ஜனநாயக படுகொலை என்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இரவோடு இரவாக கலைக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு துணை போகிறார் அதிபர் சிறிசேன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்சே பிரதமர் ஆவது அந்த நாட்டிற்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.  அமெரிக்காவோடும், சீனாவோடும், கைகோர்த்துக்கொண்டு  இந்தியாவை  சிறிசேன மிரட்டி பார்க்கிறார் என்றும், இந்தியாவின் ராஜதந்திரம் தோல்வியடைந்திருக்கிறது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்




  


Next Story

மேலும் செய்திகள்