இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் சிறீசேன...

நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் சிறீசேன...
x
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்து உத்தரவிட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரனில் விக்கிரம சிங்கேவுடன் ஏற்பட்ட மோதலால் வரை அதிபர் சிறிசேனா நீக்கி விட்டு ராஜபக்சேவை பிரதமராக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவுக்கு பிரதமர் இருக்கை வழங்கப்போவதில்லை என கூறியிருந்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்ததாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

"இலங்கையில் 2019 ஜனவரி 5-ல் தேர்தல்"

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 19ஆம் தேதி தொடங்குவதாகவும், 26ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் எனவும் இலங்கை அரசின் அரசிதழில் கூறப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதியன்று கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

"உச்ச நீதிமன்ற கருத்துக்கு பிறகே தேர்தல்"

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்திருப்பதில்,  மனித உரிமை மற்றும் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்