போர் கப்பலின் முதல் சுற்று ரோந்து பணி நிறைவு : "அணு ஆயுத சவாலுக்கு ஈடு கொடுக்கும்" - மோடி பெருமிதம்

முற்றிலும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலின் முதல் சுற்று ரோந்துப் பணி நிறைவடைந்துள்ளது.
போர் கப்பலின் முதல் சுற்று ரோந்து பணி நிறைவு : அணு ஆயுத சவாலுக்கு ஈடு கொடுக்கும் - மோடி பெருமிதம்
x
இந்திய கடற்படையில் இடம் பெற்றுள்ள 'ஐஎன்எஸ் அரிஹந்த்', என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல், முற்றிலும் அணுசக்தியால் இயங்கக் கூடியது. இந்திய கடல் பகுதிகளில் ரோந்து பணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று, பிரதமர் மோடி, இந்த கப்பலை இயக்கி வைத்தார். தற்போது, முதல் சுற்று ரோந்துப் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, அந்த கப்பலின் கேப்டன் மற்றும் வீரர்கள் உள்ளிட்ட குழுவினருடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, தேச பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றியாக 'INS Arihant' போர்க்கப்பல் உள்ளதாக கூறினார். இன்றைய கால கட்டத்தில் அணு ஆயுத அச்சுறுத்தல் போன்றவை நிலவுவதால் நாட்டின் பாதுகாப்பில், இந்த கப்பல் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்