தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் : இலங்கை அதிபருடன் சம்பந்தன் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அதிபர் மைத்திரி பால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் : இலங்கை அதிபருடன் சம்பந்தன் சந்திப்பு
x
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அதிபர் மைத்திரி பால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, அதிபருக்கு 6 கேள்விகள் முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விசயம் சட்ட ரீதியாக மட்டும்  பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அரசியல் ரீதியாக எதிர்நோக்கப்பட வேண்டும் என அதிபரிடம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் முடிந்த 9 ஆண்டுகளான நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது மனிதாபிமானமற்றது என்றும், அவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால் கூட தண்டனைக் காலம் முடிந்து தற்போது விடுதலை ஆகியிருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோருடன் அடுத்த வாரத்தில் கலந்து பேசி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கவனம் செலுத்துவதாக அதிபர் தங்களிடம் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்