மூடப்படுகிறது Google Plus வலைதளம்

Google Plus-யை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு.
மூடப்படுகிறது Google Plus வலைதளம்
x
பேஸ் புக் வலைதளம் பிரபலமடைந்ததற்கு பிறகு, அதற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் சார்பில் google plus என்ற வலைதளம் தொடங்கப்பட்டது.

ஆனால், கூகிள் பிளஸ்-க்கு, பயனாளர்கள் மத்தியில் அவ்வளவான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில், பேஸ் புக்கில் இருக்கும் லட்சக்கணக்கானோரின் விவரங்கள் திருடப்பட்டதை போன்று, கூகுள் பிளஸ்ஸில் இருந்தும் பயனாளர்களின் பெயர், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. 

தகவல் திருட்டுக்கு காரணம், கூகுளின் தவறான தொழில்நுட்பம் தான் என கூறப்படும் நிலையில், கூகுள் நிர்வாகமும் அதை மறுக்கவில்லை என தெரிகிறது.

தகவல் திருட்டு கண்டறியப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும், திருடப்பட்ட தகவல்கள் தவறான வழிகளில் பயன்படுத்தப்படவில்லை என்றும், தனது தரப்பு நியாயத்தை கூகுள் முன்வைத்தது. பல்வேறு பிரச்சினைகளின் விளைவாக, google plus-யை மூடுவதாக, தற்போது கூகுள் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆர்குட் என்ற சமூக வலைதளத்தை, கூகுள் மூடியதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்