விடுதலைப்புலிகளை பாராட்டி கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் கைது
பதிவு : அக்டோபர் 08, 2018, 12:31 PM
இலங்கையில் விடுதலைப்புலிகளை பாராட்டி கருத்து தெரிவித்த முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப்புலிகளை பாராட்டி சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், திடீரென இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்ததாக காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விசாரணைக்கு வருமாறு விஜயகலாவை அழைத்திருந்த நிலையில், வாக்குமூலம் பெறும்போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் குணசேகர கூறினார். கைதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயகலாவை, புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். 

பிற செய்திகள்

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூங்கா - பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது

சீனாவில் விளக்குகளாலான அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது. லியோனிங் மாகாணத்தில் உள்ள பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

20 views

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 views

வானில் சீறி பாய்ந்த விமானங்கள் - பட்டத்தை கைப்பற்ற கடும் போட்டி

அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான விமான சாகச போட்டி நடைபெற்றது.

50 views

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் - ஐ.நா அறிக்கை

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.

43 views

யானை குட்டி ஆனந்த குளியல் : பரவும் வீடியோ

யானை குட்டி ஒன்று குளிக்கும்போது அகற்ற பாத்திரத்தில் ஆனந்தமாக குளித்த காட்சி, இணையதளத்தில் பலராலும் பகிரப்படுகிறது.

167 views

ஆடை தயாரிக்க விலங்கு ரோமம் பயன்படுத்த எதிர்ப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசிஸில், விலங்கு நல ஆர்வலர்கள் ஒன்றுகூடி, பேரணி நடத்தினர்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.