தேம்ஸ் நதியில் பெலுகா வகை திமிங்கலம் இருப்பதாக தகவல்..!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் பெலுகா வகை திமிங்கலம் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக கடலில் இருந்து வழி தவறி திமிங்கலம் வந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்தரை அடி நீளம் கொண்ட இந்த திமிங்கலம் ஆர்டிக் பெருங்கடலில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டில் தேம்ஸ் நதிக்குள் புகுந்த இதே வகை திமிங்கலம் ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story