இன்று உலக யானை தினம்...
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 01:07 PM
உலக யானை தினமான இன்று, தனது தோற்றத்தால் பிரம்மிப்பூட்டும் யானைகள், மனிதர்களின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்களுக்கென்று தனி இடத்தை நிலை நிறுத்தியுள்ளதை குறித்து பார்க்கலாம்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பதில் யானைகளுக்கு ஈடு வேறு எதுவும் கிடையாது. மனிதர்களின் உணர்வுகளை எளிதில் உணர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகக்கூடிவை இவை, பண்டைய காலம் முதல் மனிதர்களின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்களுக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளன. 

கேரளாவில் யானைகளின் அணிவகுப்பு  கோவில் சம்பிரதாயங்களில்  இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. யானைகள் இல்லாவிட்டால் திருவிழாக்களே இல்லையென்கிற அளவிற்கு யானைகள் கோவில் திருவிழாக்களின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன.

அதுவும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் பாராட்டை பெற்ற கேரளாவின் திருச்சூர் பூரம் உலக பிரசித்தி பெற்றது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நாதர் சிவன் கோயிலில் ஆடி மாதம் தோறும்  திரளான யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தி வைக்கப்படும் அணிவகுப்பு இடம்பெறுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி இங்கு நடத்தப்படும் "யானையூட்டு விழாவில், யானைகளுக்கு உணவளித்து மகிழ்கின்றனர், பக்தர்கள்.

யானையை தேசிய விலங்காக கொண்டுள்ள தாய்லாந்தில் யானைகள் கொண்டு நடத்தப்படும் தண்ணீர் திருவிழாவை காண ஆண்டுதோறும் குவிகின்றனர், சுற்றுலா பயணிகள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட  யானைகள் மீது நீரை வாரியிறைக்கின்றன. 

பதிலுக்கு யானைகளும் தங்கள் தும்பிக்கையால் மக்கள் கூட்டத்தின் மீது நீரை பீய்ச்சியடிக்கும். இந்த தண்ணீர் திருவிழா வாழ்வில் செழிப்பை ஏற்படுத்துவதாக நம்புகின்றனர், தாய்லாந்து மக்கள் இது போன்ற திருவிழாக்கள் தென்கிழக்காசிய நாடுகளான மியன்மார், கம்போடியாவிலும் கொண்டாடப்படுகின்றன. 

மன்னர் பெயர் சூட்டப்பட்டு விளையாடப்படும் "யானை போலோ" யானைகளுடனான தொடர்பை வெளிபடுத்தும் இன்னொரு விளையாட்டாகும்.தாய்லாந்தில் யானைகள் மீது அமர்ந்தவாறு களமிறங்கி பந்துகளை நகர்த்தி விளையாடப்படும் இந்த விளையாட்டிற்கென ரசிகர்கள் ஏராளம். 

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்படும் யானை திருவிழாவில், அணிவகுப்பு , ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம் என பல்வேறு வகையான போட்டிகளில்  பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன, யானைகள் இலங்கை மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய  நாடுகளிலும் ஆண்டுதோறும் யானைகளுக்கான திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. 

மனித கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த யானைகளை பல இடங்களில் தெய்வமாகவே வணங்குகின்றனர். யானைகளை பொறுத்த வரையில் தனது உடலில் சிறிய காயம் ஏற்பட்டாலும் அதை அடிக்கடி தனது துதிக்கையால் தொட்டுப்பார்த்து வருத்தப்பட கூடியது. யானைகளை துன்புறுத்தாமல் அவற்றை தொடர்ந்து மனித இனம் உணர்வுபூர்வமாக கொண்டாடினால் மனிதனுக்கு உற்ற நண்பனாக அவை திகழ்வது நிச்சயம்.

தொடர்புடைய செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

96 views

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

889 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1710 views

பிற செய்திகள்

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

257 views

பிஜி தீவு அருகே பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவு

பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

2188 views

நிகரகுவா நாட்டில் அரசுக்கு ஆதரவு எதிர்ப்பு ஊர்வலங்கள்

நிகரகுவா நாட்டில் அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு வேறு பேரணிகள் நடைபெற்றன.

8 views

நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி

தைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.

108 views

சீனாவில் உலக ரோபோ போட்டிகள் நடைபெறுகின்றன

சீனாவின் பெய்ஜிங் நகரில் உலக ரோபோ மாநாடு மற்றும் ரோபோ போட்டிகள் நடைபெறுகின்றன.

5 views

நோபல் பரிசு பெற்ற கோபி அன்னான் மரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் , உடல் நலக்குறைவு காரணமாக சுவிட்சர்லாந்தில் காலமானார்.

307 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.