தாலிபான் தீவிரவாதிகளால் தடை செய்யப்பட்ட விளையாட்டு
பதிவு : ஜூலை 24, 2018, 03:58 PM
தீவிரவாத அமைப்பான தாலிபான்களே தடை செய்யும் அளவிற்கு ஆபத்து நிறைந்த விளையாட்டு ஒன்று ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டாக இருந்து வருகிறது
* இரு அணிகள், அணிக்கு பத்து குதிரைகள் மற்றும் பத்து வீரர்கள். 70 கிலோ எடை கொண்ட தலையில்லாத ஆடு அல்லது கன்றுக்குட்டி மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும். 

* விளையாட்டின் பிரதான விதியே, மைதானத்தின் மையத்தில் இருக்கும் அந்த இறைச்சியை குதிரையில் இருந்தபடியே கைப்பற்றி, மைதானத்தில் இருக்கும் தொட்டி ஒன்றில் நாமும் சேர்ந்து விழ வேண்டும்

* கேட்பதை விட மிகவும் அபாயகரமானது இந்த விளையாட்டு. குதிரையில் இருந்தபடியே இறந்த உடலை கைப்பற்றுவது கடினம் என்றால், அதனை கைப்பற்றிய பின்னர் சுற்றி குதிரையுடன் வரும் வீரர்கள் சாட்டையால் அடித்து நிலைகுலைய வைப்பார்கள்.

* அப்போது, குதிரை இறக்க நேரலாம். சில சமயம் வீரர்களும் கூட இறக்க நேரலாம். 

* அசுர வேகத்தில் செல்லும் குதிரையை தாக்குவதால், குதிரை நிலை தடுமாறி வீரரை தூக்கி வீசுகிறது. இதில் , பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

* பத்தாம் நூற்றாண்டில் இருந்தே துருக்கியில் இந்த விளையாட்டுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டில்  செங்கிஸ்கான் என்ற மன்னரால் ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டானது இந்த பஸ்கஷி.

* உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஆபத்தான இந்த விளையாட்டை வீர விளையாட்டாக விளையாடி வந்தனர் ஆப்கானிஸ்தான் மக்கள்.

* பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இன்றி வீரர்கள் போட்டியில் பங்கேற்பதால், பலர் உயிரிழந்தனர். ஆனாலும் விளையாட்டு தடை செய்த பாடில்லை.

* ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தபோது, இந்த போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

* அதன் பின்னர் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த போட்டிகள் மறைமுகமாக நடத்தப்பட்டு வருகின்றன.

* எனினும் இன்றளவும் ஆப்கானிஸ்தானில், திருமண நிகழ்ச்சிகள், மசூதிகளில் திருவிழா காலங்களில்  இந்த போட்டிகள் நடைபெறுவதாக கூறுகின்றனர்.

* பீட்டர் மெக்டொனால்டு, சில்வர்ஸ்டெர் ஸ்டேலொன் நடித்த ராம்போ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களிலும் Buzkashi  போட்டிகளை காணமுடியும்.

தொடர்புடைய செய்திகள்

ஆசிய போட்டி - பதக்கம் வென்ற அமல்ராஜ் தாயகம் திரும்பினார்

ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற, அமல்ராஜ் இன்று சென்னை திரும்பினார்.

24 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

242 views

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

356 views

பிற செய்திகள்

சீனாவில் காண்போரை ஈர்க்கும் மிதக்கும் வெண்மேகங்கள்....

வெண்மேக கூட்டத்தின் கொள்ளை அழகு காண்போரை கவர்ந்துள்ளது.

51 views

கம்பீரமான தோற்றம் அதிர வைக்கும் சப்தம் : இளைஞர்களின் விருப்பத் தேர்வான புல்லட்

சாலைகளில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஓடினாலும், ஒரு கணம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் 'பைக்' என்றால் அது 'புல்லட்' தான்.

1189 views

த்ரில் அனுபவம் தரும் "கண்ணாடி பாலம்" - திகில் நிறைந்த நடை பயணம்

சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

61 views

அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து - குழந்தைகள் உட்பட 19 பேர் பலி

துருக்கியில் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

104 views

தாய்லாந்து புலி உடன் அமைச்சர் ஜெயக்குமார் : பரவும் வீடியோ காட்சி

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள உயிரியல் பூங்காவொன்றில் புலி உடன் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

3996 views

வங்கிக்குள் தவறி விழுந்த மலை பாம்பு : பதறி அடித்து ஓடிய ஊழியர்கள்

சீனாவின் நன்னிங் நகரில் உள்ள வங்கியில் திடீரென்று தரையில் விழுந்த மலை பாம்பால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

1057 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.