பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 70 பேர் பலி

பாகிஸ்தானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 70 பேர் பலி
x
பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகருக்கு அருகில் உள்ள மஸ்டங் என்ற இடத்தில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. நவாஸ் ஷெரிப் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள முத்தஹிதா மஜ்லிஸ் அமல் கட்சி சார்பாக நடந்த அந்த கூட்டத்தில் தற்கொலைப் படை தீவிரவாதி திடீர் தாக்குதல் நடத்தினான். பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்ததில், கூட்டத்தில் இருந்தவர்களில் ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிய ஏராளமானோர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  எனினும், சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் 70 பேர் பலியானதாக பலுசிஸ்தான் மாகாண சுகாதார துறை அமைச்சர் அக்ரம் கான் துரானி தெரிவித்தார். இதற்கிடையே, தற்கொலைப்படை தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் செயல்படும் 'தலிபான் தீவிரவாத இயக்கம்' பொறுப்பேற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்