பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது - லண்டனில் இருந்து லாகூர் திரும்பியதும் அதிரடி நடவடிக்கை

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், அவரின் மகள் மரியம் நவாஸ் ஆகியோர், லண்டனில் இருந்து லாகூர் விமான நிலையம் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது - லண்டனில் இருந்து லாகூர் திரும்பியதும் அதிரடி நடவடிக்கை
x
'பனாமா பேப்பர்ஸ்" ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழந்தார். 

அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் பணத்தில்,  இங்கிலாந்தின் லண்டன் நகரில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என தெரிவித்த நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டும்,  மரியம் நவாசுக்கு 7 ஆண்டும், சப்தாருக்கு ஒரு ஆண்டும் சிறை தண்டனை விதித்தது. 

இந்நிலையில், லண்டனில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வரும் மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார். இந்நிலையில் இருவரும் அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பினர். அப்போது, லாகூர் விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்புப் படையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்