சிறிய நீர் மூழ்கி சாதனத்தை கொடுத்த எலான் மஸ்க் யார்?
பதிவு : ஜூலை 12, 2018, 12:17 PM
மாற்றம் : ஜூலை 12, 2018, 12:18 PM
இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வுடன் காத்திருக்கும் எலான் மஸ்க்.
ஜூன் 23ம் தேதி தாய்லாந்து கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்களும்,  பயிற்சியாளரும் மீட்க பல நாடுகள் கரம் நீட்டினங்க. ஆனா, அதில அதிக கவனத்தை ஈர்த்த ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்.  உள்ள இருக்குறங்கள மீட்கனும், அதுக்கு, Balloon மாதிரி விரிய கூடிய வகைல, ஒரு நைலான் டியூபை உள்ள செலுத்தி, அத விரிய வைச்சு, ஒரு வழி அமைக்கலாம்னு யோசனை சொல்லிட்டு இருந்தவரு திடீர்னு,  சிறுவர்களை மீட்க,  8 மணி நேரத்துல, ராக்கெட் செய்ய பயன்படுத்துற பாகங்கல வைச்சு ஒரு சின்ன நீர் மூழ்கி சாதனத்தை செய்து பரிசோதனை பண்ணிடோம், இதோ எடுத்துட்டு தாய்லாந்து வரேனு, கிளம்பி வந்தார்..  ஆனா, இந்த சாதன இந்த குகைக்கு சரி வராதுனு சொல்லிடாங்க... உடனே அவர், சரி இத நீங்களே வச்சுகோங்க, இனி வர கூடிய காலங்களில் இது பயன்படலாம்னு சொல்லிடுn வந்துடார்...  இது குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்படுது.. எலான் மஸ்க்கு, தாய்லாந்து குகைல இந்த சாதனம் பயன்படாதுனு தெரியும்.. ஆனா இத வைச்சு தன்ன விளம்பர படுத்திக்க இந்த சந்தர்பத்த சரியா பயன் படுத்திடார்னு விமர்சனம் வைக்கப்படுது. இவர் ஏன் இவர விளம்பர படுத்திக்கனும்னு... காரணம் இருக்கு... இவருடைய நிறுவனங்கள ஒன்னு டெஸ்லா.. இந்த நிறுவனம் பேட்டரி கார்கள தயாரிக்குது... அதுவும், உலகத்துலயே மிக வேகமான கார், மிக பாதுகாப்பான கார் இந்த நிறுவனம் தயாரிச்ச கார் தான்... சில மாசத்துக்கு முன்னாடி கூட, டெஸ்லா காரை  செவ்வாய் கிரகத்துக்கு, இவரருடைய இன்னொரு நிறுவனமான  SPACE X  தயாரித்த ராக்கெட் மூலமா அனுப்பினார். இப்ப அந்த கார் புவிவட்ட பாதைல சுத்திட்டு இருக்கு.. ஒரு முறை சார்ஜ் பன்னினா, 500 முதல் 600 கிலோ மீட்டர் வரைக்கும் இந்த கார் போகும். இந்தியா மாதிரியான நாடுகளுக்கு இன்னும் 10 ஆண்டுகள்ல இவர் ஒரு ஆபத்பாந்தவனா கூட தெரிய வாய்ப்பு இருக்கு... காரணம்... இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிய குறைக்கனும்னா, பேட்டரி கார்கள் வந்தாகனும், CHARGING PORT வைச்சு குடுங்க, உடனே இந்தியாவுக்கு வந்துடுரனு மஸ்க் சொல்றார். இது மாதிரி உலகம் முழுதும், பட்டி தொட்டியெல்லாம், தன்ன பத்தி தெரியனும்னா, இது மாதிரி சில விஷயங்கள செஞ்சு ஆகனும்லனும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுது..

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

719 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2407 views

பிற செய்திகள்

மாரத்தானில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர்

கியூபாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் போட்டியாளராக பங்கேற்றார்.

45 views

47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல் கடலடியில் இருந்து மீட்பு

தாய்லாந்தில் 47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல், நான்கு மாதத்திற்கு பிறகு கடலடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

65 views

திருமணத்தை உறுதி செய்த ஜஸ்டின் பீபர்

பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், அமெரிக்க மாடல் அழகியான ஹெய்லி பால்ட்வின்னை திருமணம் செய்ய போவதை உறுதி செய்துள்ளார்.

1394 views

பேஸ்புக் சிஇஓ பதவி விலக வலியுறுத்தல்

பேஸ்புக் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

687 views

"எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால் இலங்கை பல பிரச்சினைகளை சந்திக்கும்" - அதிபர் சிறிசேன

தனது ஆலோசனைகளை செயல்படுத்தவில்லை என்றால், இலங்கை, பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1051 views

பெரும்பான்மை இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் - ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளர் குமார வெல்கமா கருத்து

இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார்.

341 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.