தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை - நடந்தது என்ன ?
பதிவு : ஜூலை 11, 2018, 12:36 PM
மீட்புப் பணி எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
* தாய்லாந்தில் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியை சேர்ந்த 12 வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும்  சியாங் ராய் என்னும் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

* கடந்த ஜூன் 23-ம் தேதி,  அங்கு இருந்த 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாம் லுவாங் குகையை nபார்வையிடுவதற்காக உள்ளே சென்றனர். அப்போது  திடீரென பெய்த  பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் குகைக்குள் வெள்ளநீரும், சகதியும் புகுந்தது.

* அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் 13 பேரும் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். 

* இதனிடையே கால்பந்து அணியை சேர்ந்த 13 பேர் காணாமல் போன தகவல் தாய்லாந்து முழுவதும் பரவியது.

* இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழு, குகை வாயிலில் இருந்த மிதிவண்டிகள் உள்ளிட்ட பொருள்களை வைத்து குகைக்குள் 13 பேரும் சிக்கியதை உறுதி செய்தனர். 

* தொடர்  கன மழை மற்றும் மோசமான வா​னிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இந்தத் தகவல் தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

* குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று தாய்லாந்து முழுவதும் பிரார்த்தனைகள்  நடைபெற்றன.

* இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகைக்குள் பாறை மேடு ஒன்றில் 13 பேரும் அமர்ந்திருப்பதை கண்டறிந்தார். பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்று காணப்பட்ட நிலையில் அவர்கள் பேசிய வீடியோ வெளியானது.

* இதையடுத்து மீட்பு பணியில் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற மீட்பு படை களம் இறங்கியது.

* அதன் தொடர்ச்சியாக, குகைக்குள் சிக்கியவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப்  பொருள்கள் அனுப்பப்பட்டன. 

* குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என மீட்புக் குழு தெரிவித்தது.  எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

* இந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்த நிலையில் பன்னாட்டு மீட்புக் குழுவினரும் பணியில் இணைந்து கொண்ட நிலையில் குகைக்குள் சிக்கியிருந்த  13 பேரில், 4 சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

* மீட்புப் பணி எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, திங்கள்கிழமையும் தொடர்ந்த நிலையில்,மேலும் 4 சிறுவர்கள், குகைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வரப்பட்டனர்.

* இந்நிலையில் செவ்வாய் கிழமையன்று மேலும் 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இறுதியாக குகைக்குள் சிக்கி இருந்த ஒரே ஒரு சிறுவனும், பயிற்சியாளரும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.

* சிறுவர்கள் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டது தாய்லாந்து மட்டுமின்றி  உலகம் முழுவதுமே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

1137 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2914 views

பிற செய்திகள்

நிலவில் முளைத்தது தாவரம் : வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வு

வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வாக, நிலவில் தாவரம் முளைத்துள்ளது.

6 views

ஜன.20ல் சந்திர கிரகணத்துடன் கூடிய 'சூப்பர் ப்ளட் மூன்' : இந்த ஆண்டில் முதல் அதிசயம்

ஜனவரி 20ம் தேதி, சந்திர கிரஹணத்துடன் கூடிய 'சூப்பர் ப்ளட் மூன்' என்ற அதிசயம், நிகழ உள்ளது.

15 views

செய்தித் துறையில் களமிறங்கும் ஃபேஸ்புக்

சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

103 views

இந்திய மீனவர்கள் ஊடுருவல் குறித்து இலங்கை கடற்படை அறிக்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்களால், தங்களது படகுகளுக்கு சேதம் ஏற்படுவதாக, இலங்கை கடற்படை புகார் தெரிவித்துள்ளது.

89 views

தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து

தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து

8 views

வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியலிடும் யானைகள் : 45 டிகிரி செல்ஸியஸாக வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை

வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியலிடும் யானைகள் : 45 டிகிரி செல்ஸியஸாக வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.