இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி காஷ்மீர் - ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்

பாகிஸ்தானின் வெற்று முழக்கங்கள் எடுபடாது
இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி காஷ்மீர் - ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்
x
காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், பாகிஸ்தானின் வெற்று முழக்கங்கள் எல்லாம் எடுபடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் இந்தியா தரப்பில் பேசிய செயலாளர் சந்தீப் குமார் பையாபு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பற்றி தவறான கருத்தை தெரிவிப்பதற்காக, இந்த மேடையே பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.இந்தியாவில் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்க முடியாத பகுதி காஷ்மீர் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் வெற்று முழக்கங்கள் எல்லாம் இதனை ஒருபோதும் மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்