வட கொரிய அதிபருடன் புத்தம் புது நல்லுறவு பூத்தது - அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்

"வட கொரிய அதிபருடன் புத்தம் புது நல்லுறவு பூத்தது" சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் "அமெரிக்க அதிபரை சந்தித்து மகிழ்ச்சி" - கிம் ஜாங் உன்.
வட கொரிய அதிபருடன் புத்தம் புது நல்லுறவு பூத்தது - அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்
x
அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையில் உலகமே கவலையுடன் விவாதித்து கொண்டிருந்த வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது.  

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இடையிலான சந்திப்பு இந்திய நேரப்படி, இன்று காலை ஆறரை மணியளவில் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் துவங்கியது. இங்குள்ள கோபல்லா என்ற நட்சத்திர ஹோட்டலில் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தை நடைபெறும் ஹோட்டலுக்கு முதலில் வந்தது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். கிம் ஜாங் உன் வந்த 5 நிமிடங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வந்தடைந்தார். 

முன்னதாகவே சிங்கப்பூருக்க வந்து விட்ட கிம் ஜாங் உன், நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் அரசு படு ரகசியமாக வைத்திருந்தது. அவர் தங்கிய இடம், சென்று வந்த இடங்கள் என அனைத்துமே, சஸ்பென்ஸ்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பும், பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரில் கால் பதித்தார். 

நேற்று மதியம், அமெரிக்க அதிபருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் ஹூன், மதிய விருந்து அளித்தார். அந்த விருந்தில் டிரம்புக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. டிரம்பின், பிறந்தநாளை அங்கே கொண்டாட சிங்கப்பூர் பிரதமர் ஏற்பாடு செய்திருந்தார். மதிய விருந்தில் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை வெட்டினார் டிரம்ப். 

இந்நிலையில், உலகமே எதிர்ப்பார்த்த அந்த சந்திப்பு இன்று காலை ஆறு முப்பது மணிக்கு சென்டோசா தீவில் தொடங்கியது. இருவரும், கைகுலுக்க உலகெங்கிலும் இருந்து வந்திருந்த ஊடகங்களின் கேமிராக்கள் சந்திப்பை உள்வாங்கியது. 

வடகொரிய அதிபர் உடன் தமக்கு புத்தம் புதிய ஒரு நல்லுறவு பூத்திருப்பதாக, சந்திப்பு பற்றி பெருமிதம் கொண்டார் டிரம்ப். இன்னொரு பக்கம், பல்வேறு தடைகளை தாண்டி, இந்த சந்திப்பு நடைபெறுவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்