அணைகளில் இருந்து நீர் திறப்பு; ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மலைப்பகுதியிலும், வடகேரளப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது...
x

நீலகிரி மலைப்பகுதியிலும், வடகேரளப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • இதனால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதைத் தொடர்ந்து அணையில் இருந்து முதல் கட்டமாக 7 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டது.
  • பின்னர் 25 ஆயிரத்து 488 கன அடியாக நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 500கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
  • இதையடுத்து பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், மேடான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு பவானிசாகரில் இருந்து 16 ஆயிரத்து 663 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

  • இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் கிராம மக்களுக்கும், பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் ஆற்றில் இறங்கவும், பரிசலில் செல்லவும், துணி துவைக்கவும் தடை விதித்து ஒலி பெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
  • அதே போன்று பெரியகொடிவேரி, மேவானி, புளியம்பட்டி உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர கிராமங்களிலும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்