மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ஆக்சிஜன் மாஸ்க்-க்கு பதிலாக டீ குடிக்கும் கப் மூலம் ஆக்சிஜன்

x

மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ஆக்சிஜன் மாஸ்க்-க்கு பதிலாக டீ குடிக்கும் கப் மூலம் ஆக்சிஜன் - வெளியான மருத்துவமனையின் அதிர்ச்சி வீடியோ

அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னால் பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளான். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உடனடியாக சிறுவனுக்கு ஆக்சிஜன் சுவாசம் வழங்க அறிவுறுத்தினார். மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், ஆக்சிஜன் செலுத்தும் முகக் கவசம் இல்லாததால், டீ குடிக்கும் பேப்பர் கப்பினை எடுத்து முகக்கவசமாக பயன்படுத்தி அலட்சியமாக ஆக்சிஜனை செலுத்தி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே,

அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில்,

மருத்துவத்துறை அதிகாரிகள், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்