கோயிலில் பூப்பறித்த மூதாட்டி; அர்ச்சகர் - மூதாட்டி இடையே கடும் வாக்குவாதம் - தீயாய் பரவும் வீடியோ

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் மற்றும் மூதாட்டி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் மற்றும் மூதாட்டி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தல்லாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், மூதாட்டி ஒருவர் கோயில் நிர்வாகத்தின் அனுமதி இன்றி, கோயிலில் உள்ள எலுமிச்சை பழங்கள் மற்றும் பூக்களை பறித்துள்ளார். இதனை கண்ட அர்ச்சகர் மாரிச்சாமி, மூதாட்டியை கண்டித்துள்ளார். அப்போது, மூதாட்டி அர்ச்சகரை சாதி ரீதியாக திட்டியதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்