கத்திமுனையில் பெண் பலாத்காரம்..வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் - அதிரடியாக கைது செய்த போலீஸ்

அடையாறு பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண், அரசு அலுவலகம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2009.ல் கணவரை இழந்த அந்தப் பெண், மகள்களை திருமணம் செய்துகொடுத்த நிலையில், தனியாக வசித்துள்ளார்.
x
கத்திமுனையில் பெண் பலாத்காரம்..வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் - அதிரடியாக கைது செய்த போலீஸ் அடையாறு பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண், அரசு அலுவலகம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2009.ல் கணவரை இழந்த அந்தப் பெண், மகள்களை திருமணம் செய்துகொடுத்த நிலையில், தனியாக வசித்துள்ளார். இதனிடையே, இருதினம் முன், அந்தப் பெண் வேலை முடித்து வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் வெளியே நின்ற இளைஞர், அந்த பெண்ணை வீட்டுக்குள் தூக்கிச் சென்று, கத்திமுனையில் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், ஆபாசமாக வீடியோ எடுத்த அந்த இளைஞர், போலீஸில் கூறினால், அதை வெளியிடுவதாக கூறி மிரட்டியும் உள்ளார். பாதிக்கப்பட்ட பெண், தனது மகளிடம் கூறி அழுத நிலையில், புகாரளிக்கப்பட்டது. இதன் பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 20 வயது விஷால் என்ற கல்லூரி மாணவனை கைது செய்தனர். அவன் தொடர் கஞ்சா பழக்கமுடைய நபர் என்பதால், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்