ரயில் கட்டணம் உயர்வு? - மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்

ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
x
ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வந்த 50 சதவீத கட்டண சலுகையை தொடர வாய்ப்பில்லை என தெரிவித்தார். விரைவில், புறநகர் ரயில்களில், ஏசி வசதி செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க, ரயில் தண்டவாளங்களை யானைகள் கடப்பதற்கு வசதியாக, சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் முழுவதுமாக 760 கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்