தீவிர புயலாக வலுவடைந்த‌து 'அசானி'

அசானி புயல், தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
அசானி புயல், தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் கடல் மற்றும் சுற்றுப்புறங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.  புயலுக்கு "அசானி" என பெயரிடப்பட்டுள்ள நிலையில், மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தென் கிழக்கு வங்க‌க் கடலில், அந்தமானில் இருந்து 610 கிலோ மீட்டர் வட மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகரும் என்றும், 10ஆம் தேதி இரவு மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க‌க் கடலுக்கு நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புயல் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்