இடி,மின்னலின் போது செய்யக்கூடாதவை என்ன ?

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. இடி, மின்னலில் இருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
x
கடகட சத்தத்துடன் இடியும், பளிச் சென்ற ஒளியுடன் மின்னலும், சரசரவென கொட்டும் மழையும், ஒரு கலை நிகழ்ச்சி போல், மகிழ்ச்சியானது.

எனினும், அழகினுள்தானே ஆபத்தும் என்பது போல், இடி மின்னலில் பாதிப்புகளும் இல்லாமல் இல்லை.
மேகத்திலிருந்து தரைக்கு மின்னோட்டம் பாய்வதே மின்னல். காற்றில் உள்ள நைட்ரஜனைக் கரைத்து நைட்ரேட்டாக பூமிக்கு ஊட்டமளிக்கிறது இடியும், மின்னலும். இந்த நிலையில் இடி, மின்னலின் போது, நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன ?

மின்னலின் வெப்பநிலை 15 ஆயிரம் டிகிரி செல்சியஸாக உள்ளது. வெட்டவெளியில் இருக்கும் ஒற்றை மரம், ஆட்டு மந்தைக் கூட்டம் மற்றும் கேரளாவில் அதிக பாதிப்பு உள்ளது. 

பத்து விநாடிகளுக்குள் இருமுறை மின்னல் வந்தால் பாதுகாப்பான கட்டடத்துக்கு செல்ல வேண்டும். காதுகளைப் பொத்திக் கொண்டு முன்னங்கால்களை மட்டும் தரையில் ஊன்றி அமர வேண்டும். ஜன்னல் அருகில் நின்று போன் பேசக்கூடாது. உயரமான கோபுரமோ, மாடிகளில் டிவி ஆண்ட்டனா அருகில் நிற்பது கூடாது என்பதே அறிவியல் எச்சரிக்கை.




Next Story

மேலும் செய்திகள்