அட்சய திருதியை - தங்கம் 30% கூடுதல் விற்பனை

தமிழகம் முழுவதும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனையாகி பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
தமிழகம் முழுவதும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனையாகி பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்சய திருதியை நாளான நேற்று தங்கம் விற்பனை களைகட்டியது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், மேலும் பெருகும் என்ற நம்பிக்கையால், பலரும் நகைக் கடைகளில் குவிந்தனர். சென்னை தியாகராய நகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நகைக் கடைகளிலும் விற்பனை களைகட்டியது. இதுகுறித்து, தந்தி டிவி செய்தியாளரிடம் பேசிய தங்க நகை விற்பனையாளர்கள், அட்சய திருதியை நாளில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் தங்கம் விற்றதாக கூறினர். சுமார் 18 டன் தங்கம் விற்பனையானதாக கூறிய வியாபாரிகள் சங்கம், 2019ஆம் ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகம் என்றனர். மற்ற நாட்களில் சுமார் 8 டன் வரை தங்க விற்பனை நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்