இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ மோதி விபத்து - 3 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி

திருப்பூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
x
திருப்பூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவையில் இருந்து 2 இரு சக்கர வாகனங்களில் குமரேசன் மற்றும் முருகன் ஆகியோர் தங்கள் மனைவி மற்றும் முருகனின் 3வயது குழந்தையுடன் மணப்பாறை நோக்கி சென்றுள்ளனர். இன்று அதிகாலை புத்தரச்சல் அருகே வந்த போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், குமரேசன், முருகன், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் குமரேசன் மனைவி ஆனந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்