காரில் இருந்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த சசிகலாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
x
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த சசிகலாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா, தற்போது, தென்மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது ஆதரவாளர்களை சந்தித்து வரும் அவர், மதுரைக்கு செல்லும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். ஆண்டாள் கோயிலுக்கு சென்ற அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் வன்னியம்பட்டி மற்றும் ஆண்டாள் கோவில் முன்பு வரவேற்பதற்காக திரண்டனர்.
பின்னர், சசிகலா வந்தவுடன் காரில் இருந்த படியே, ஆண்டாள் கோயில் கிளி மாலை, பரிவட்டம் ஆகியவைகளை பெற்றுக்கொண்டார். அவரை வரவேற்க 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காரிலிருந்து இறங்காமலேயே அவர், மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்