கங்கைகொண்ட சோழபுரம் கோவில்..தொல்லியல் துறை கட்டுமானம் மேற்கொள்ள தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி..

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில்,  முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சோழீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, இந்திய தொல்லியல் துறை சார்பில் மூன்று கோடி ரூபாய் செலவில் அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியதாகவும், பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்கள் கட்டுவது  குற்றம் எனவும் வழக்கறிஞர்  பாலகுரு என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், தமிழக அறநிலைய துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 38, 39 மீட்டர் தூரத்தில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தொல்லியல் துறை சட்ட விதிகளின்படி, 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமானங்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால், சொந்த விதிகளையே  தொல்லியல் துறை காற்றில் பறக்கவிட்டதாக கூறி, கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக தொல்லியல் துறை பதிலளிக்க உத்திரவிட்ட நீதிபதி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்