திம்பம் : வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் - நோயாளிகள் கடும் அவதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறையினர் நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறையினர் நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு ஆட்சியர் திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தைத் தடை செய்ய பிறப்பித்த உத்தரவில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்திருந்தார். இலகு மற்றும் கனரக வாகனங்களில் 4 சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், வேனுக்கு 30 ரூபாயும், 6 சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், 8 சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், 12 சக்கர வாகனங்களுக்கு 100 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை அறிய அறிவிப்பு பட்டியல் சோதனைச் சாவடியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்