என்னை ஏமாற்றியவரை கைது செய்யுங்கள் - காவல் நிலையம் முன்பு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
x
சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல் ஈடுபட்டனர். வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த ஷீலா என்ற திருநங்கை குட்வில் என்பவருடன் 14 ஆண்டு காலம் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டு ஷீலாவை துரத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருநங்கை ஷீலாவை ஏமாற்றிய குட்வில் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, திருநங்கைகள் பலர் வில்லிவாக்கம் காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் புகாரைப் பெற்ற காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்