இளைஞர் கொலையில் திடீர் திருப்பம் - நண்பனே அடித்து கொன்றது அம்பலம்

தேனியில் மது போதையில் பாலத்தில் இருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி இளைஞர் பலியானதாகக் கருதப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
x
தேனி அருகே தெ.கள்ளிபட்டியை சேர்ந்த போதுராஜா என்ற 37 வயது இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக வடுகபட்டி புறவழிச் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். 

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில், போதுராஜா அடித்துக் கொலை செய்யப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

அதில், போதுராஜாவும் அவரது நண்பரான தாமரைக் குளத்தைச் சேர்ந்த வீரமுத்துவும் பாலத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், போதுராஜாவை அடித்து நீரில் மூழ்கடித்து வீரமுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து கொலையை மறைக்க வீரமுத்துவுக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர்கள் ரஞ்சித் குமார் மற்றும் ராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்