அடிபட்ட முதியவருக்கு ரயிலை நிறுத்தி முதலுதவி அளித்த ஓட்டுனர்!

ரயிலின் பக்கவாட்டில் விழுந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிகிறது.
x
 ரயிலின் பக்கவாட்டில் விழுந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிகிறது. சிதம்பரம் அருகே உள்ள கந்தமங்கலம் கிராசிங்கில் பாமினி எக்ஸ்பிரஸ் வந்த போது அதே பகுதியை சேர்ந்த காதுகேட்காத முதியவர் ஒருவர் ரயில் பக்கவாட்டில் விழுந்துள்ளார். இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி, முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே ரயிலை நிறுத்தி முதியவருக்கு முதலுதவி செய்த ஓட்டுனரை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்