அதிமுகவிற்கு சமூக சமத்துவ படை கட்சி ஆதரவு - நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு சமூக சமத்துவப்படை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு சமூக சமத்துவப்படை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நிறுவன தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் சிவகாமி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்