அரசுப் பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி - குவியும் பாராட்டுக்கள்

திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 3 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
x
திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 3 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் தீபா தலைமையில் நடைபெற்ற விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. காமாட்சிபட்டியை சேர்ந்த விவசாயி நல்லதம்பி மகள் ஜமீனா, போக்குவரத்து மேலாளராக பணியாற்றும் பழனிமுத்து மகள் பவதாரணி, மணமேடு கிராமத்தைசேர்ந்த விவசாயி கண்ணையன் மகள் ருக்மணி ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் இவர்கள் இன்று பங்கேற்கவுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்