"அந்த மனசு தான் கடவுள்" -பணத்தை தவற விட்ட மாற்றுத் திறனாளி - கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மை பணியாளர்

சிவகங்கையில், சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீஸார் பாராட்டினர்.
x
சிவகங்கையில், சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீஸார் பாராட்டினர். மாற்றுத் திறனாளியான பாபு என்பவர் 10 ஆயிரம் ரூபாயை சாலையில் தவறவிட்டது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் செக்காலை பகுதியில் சரஸ்வதி என்பவர்  தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது, 10 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தார். சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவிய தூய்மை பணியாளர் சரஸ்வதியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்