"நேர்மைக்கு கிடைத்த பரிசு" - வீதியில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த பெண்

ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
x
ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். கோகிலா என்பவர் காடையாம்பட்டி பகுதியில் மூன்றே முக்கால் சவரன் தாலிக்கொடியை தவறவிட்டுள்ளார். இந்த நகையை அதே பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் கண்டெடுத்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ருக்மணியின் செயலை பாராட்டும் விதமாக காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்