கடைகளுக்கு மின்சாரம் துண்டிப்பு - சீல் வைப்பு - குடியிருப்பு வாசிகள் தொடர் தர்ணா

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், பெத்தல் நகரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், பெத்தல் நகரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 4000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி ஒன்றியமாக இருந்தபோது மக்கள் வசிப்பதற்காக நிலங்கள் வழங்கப்பட்டதாகவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், ஈச்சம்பாக்கம் பெத்தல் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்குள்ள கடைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்