கோயில் குளியலறையில் ரகசிய கேமராக்கள்... அதிர்ச்சியில் பெண் பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயில் குளியலறையில் மூன்று ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
x
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயில் குளியலறையில் மூன்று ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு விருதுநகரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர்  வந்துள்ளார். கோயில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்ற அவர், அங்கு கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கூறிய அந்த பெண் போலீஸிலும் புகார் அளித்தார். அங்கு போலீசார் மேற்கொண்ட ஆய்வில், 3 ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்டன. கோயில் நிர்வாகத்திடம் விசாரித்த போது, தங்களை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே கேமரா வைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக கூறினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்