பைக் சீட்டுக்குள் புகுந்து ஆக்ரோஷமாக சீறிய பாம்பு!
கடலூர் மாவட்டம் முள்ளோடை கிராமத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகன சீட்டுக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டது.
கடலூர் மாவட்டம் முள்ளோடை கிராமத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகன சீட்டுக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பாம்பு ஆர்வலர் செல்லா, பாம்பை பிடித்து காப்புக்காட்டில் விட்டார். முன்னதாக, பாம்பை பிடிக்க முயன்ற போது அது ஆக்ரோஷமாக சீறுவதோடு, படமெடுத்தாடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story