பிரபல ரவுடி தியாகு கைது - விமானம் மூலம் சென்னை அழைத்து வந்த போலீசார்

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தியாகுவை போலீசார் கைது செய்தனர்.
x
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகராஜன் என்கிற தியாகு மீது11 கொலைகள், 15 கொலை முயற்சிகள், கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, பணம் பறித்தல், உள்ளிட்ட 63 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவற்றில் கைது செய்யப்பட்டு,  ஜாமினில் வெளியே வந்து தியாகு தலைமறைவானார்.  இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார்  தியாகுவை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் தியாகு பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், தியாகுவை கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்