10, 11 வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு துறை உத்தரவு
10 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விபரங்களை வரும் 31 ந் தேதிக்குள் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது
10 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விபரங்களை வரும் 31 ந் தேதிக்குள் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை அனுப்பி உள்ள கடிதத்தில், நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவரின் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உயர்நிலை , மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.10 மற்றும், 11 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விபரத்தை ஜனவரி 19 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றுவதில் சில சிரமங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தினை செலுத்துவதற்கு நாளை முதல் வருகிற 31 ஆம் தேதி வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும் எனவும் இனி கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story