திடீர் சாலை மறியல் - திருநங்கையரை எச்சரித்த போலீசார்
சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகளை போலீசார் எச்சரித்ததால், அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், சஞ்சீவி நகர் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் திருநங்கைகள் 3 பேர் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்துள்ளனர். அவர்களை எச்சரித்த போலீசார், அங்கிருந்து புறப்பட கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவர்கள் புறப்படாமல் இருந்த நிலையில், காவல் ஆய்வாளர் கடுமையாக எச்சரித்துள்ளார். அப்போது, மூன்று திருநங்கைகளும் சேர்ந்து காவல் ஆய்வாளரை தள்ளி விட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், ஒரு திருநங்கையை அறைந்துள்ளார். இந்நிலையில், காவல் ஆய்வாளரை கண்டித்து சுமார் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பேருந்தின், முகப்பு கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story